ரிஷபம் 2019 புத்தாண்டு ராசிபலன்:
ரிஷபம் புத்தாண்டு ராசிபலன்கள் 2019:
பொதுவானவை:
வருடத்தின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் சாதகமான விடுகளில் செல்வதால் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை, மனமகிழ்ச்சி போன்றவை சிறப்படையும். எட்டாம் வீட்டில் (அஷ்டம சனி) சனி பகவான் உள்ளதால் எடுத்த காரியங்களில் தடை ஏற்படும். பதினோராம் வீட்டில் உள்ள செவ்வாய் காரணமாக இடம், மனை, வாகனம் முலம் நன்மைகள் ஏற்படும். உங்களின் சொந்த தொழில் மந்தமாக இருக்கும். வேலையில் உள்ளவர்கள் பொறுப்புடன் செயல் படவும். சில நேரங்களில் வேலை பளு அதிகரிக்கும். திருமணம், குழந்தை பிறப்பு போன்ற சுப காரியங்களில் தடை ஏற்படும். மனமகிழ்ச்சியை விட பொருளாதார உயர்வு அடையும் காலமாக இருக்கும். எந்த செயலையும் கவனத்துடன் செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். இருப்பினும் எந்த ஒரு காரியத்தை எடுத்து கொண்டாலும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்... மேலும் இந்த வருடம் நிகழும் குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி போன்றவை உங்களுக்கு என்ன பலன்களை தரும் என்பதை விரிவாக பார்போம்.
2019 ரிஷப ராசி புத்தாண்டு பலன்கள் வீடியோ:
குரு பெயர்ச்சி:
ஏழாம் வீட்டில் உள்ள குருபகவான் காரணமாக மனமகிழ்ச்சி, சந்தோசம் போன்றவை கிடைக்கும். காதல் விஷயங்கள் வளர்ந்து திருமணத்தில் சென்று முடியும். வீட்டில் சுப காரியங்கள் இனிதே நடைபெறும். குழந்தை இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெறுவார்கள். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். பெண்களுக்கு திருமண பேச்சுக்கள் மகிழ்ச்சியை தரும். மேலும் குருபகவான் 29-03-2019 அன்று விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு சஞ்சாரம் செய்கிறார், மீண்டும் குருபகவான் வக்கிர நிலையில் 23-04-2019 அன்று விருச்சக ராசிக்கே செல்கிறார். பின் 05-11-2019 அன்று முறையாக தனுசு ராசிக்கு செல்கிறார். தனுசு ராசியில் செல்லும் காலம் உங்களுக்கு பிரச்சனைகளை தரும் வகையில் உள்ளதால் அதற்குள் திருமணம், குழந்தை பிறப்பு போன்ற சுப காரியங்களை நடத்தி கொள்வது நல்லது. 2019 வருட இறுதியில் நடைபெறும் குரு பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இல்லை.
சனிப் பெயர்ச்சி:
2019 இல் சனிபெயர்ச்சி இல்லை. சனிபகவான் தனுசு ராசியில் எட்டாம் வீட்டில் உள்ளதால் அஷ்டம சனியாக, சனிபகவான் இருந்து நன்மைகளை குறைப்பார். எட்டாம் வீட்டில் உள்ள சனிபகவான் காரணமாக எதிர்மறை எண்ணங்கள், பிரச்சனைகள், வலி வேதனைகள், கடன்கள், வீண் வழக்குகள் போன்றவை வந்து சேரும். வேலைகாரர்கள் மூலம் தொல்லைகள் ஏற்படும். நன்மைகள் குறைந்து பிரச்சனைகள் தோன்றும். எடுத்த காரியங்களில் கவனம் தேவை. பிரச்சனைகள், விரயங்கள் ஏற்படும். ஜென்ம சனி என்பதால் எதையும் யோசித்து செயல்படவும்.
ராகு கேது பெயர்ச்சி:
ராகுபகவான் மூன்றாம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் கிடைக்கும். வெளிநாடு, வெளிநாடு வேலை போன்றவை சிறப்பாக இருக்கும். அந்நிய நபர்கள் மூலம் சிலருக்கு அலைச்சல் கிடைக்கும். ஒன்பதாம் வீட்டில் உள்ள கேது பகவான் காரணமாக ஆன்மீக விஷயங்கள் சிறப்பாக இருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். மேலும் 07-03-2019 அன்று ராகு பகவான் மிதுன ராசிக்கும், கேதுபகவான் தனுசு ராசிக்கும் சஞ்சாரம் செய்கிறார்கள். அதாவது ராகு இரண்டாம் வீட்டிலும், கேது எட்டாம் வீட்டிற்கும் பெயர்ச்சி அடைவார்கள். இதன் மூலம் ராகுவால் நல்ல வருமானம், வேலை கிடைக்கும். கேதுவால் சில பிரச்சனைகள் ஏற்படும். எட்டாம் வீட்டை பல கிரகங்கள் தொடர்பு கொள்வதால் நன்மைகள் குறையும்.
பொதுவாக இந்த 2019 ம் வருடம் நன்மைகள் குறைவாக கொண்ட வருடமாக இருக்கும். கவனமாக செயல்பட்டு பிரச்சனைகளை சமாளிக்கவும் இறைவழிபாடு செய்யவும்.
அதிர்ஷ்ட எண் - 5, 9
அதிர்ஷ்ட நிறம் - பச்சை, சிகப்பு
அதிர்ஷ்ட நாள் - புதன், செவ்வாய்
அதிர்ஷ்ட இரத்னம் - மரகதம், பவளம்
பரிகாரம்:
திருநள்ளாறு சென்று சனீஸ்வர பகவானை தரிசித்து வரவும். அம்பாள் சன்னதியில் செவ்வாய் கிழமைகளில் விளக்கேற்றி வர நன்மைகள் கிடைக்கும்.
கீழே உள்ள ராசிகளை கிளிக் செய்து உங்களுக்கு உண்டான பலன்களை பரிகார விளக்கங்களுடன் தெரிந்து கொண்டு பயன்பெறவும்...
- மேஷம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- ரிஷபம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- மிதுனம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- கடகம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- சிம்மம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- கன்னி 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- துலாம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- விருச்சிகம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- தனுசு 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- மகரம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- கும்பம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- மீனம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- மாத ராசிபலன்கள் முதல் பக்கம்
- மேஷம் - மாத ராசிபலன்கள்
- ரிஷபம் - மாத ராசிபலன்கள்
- மிதுனம் - மாத ராசிபலன்கள்
- கடகம் - மாத ராசிபலன்கள்
- சிம்மம் - மாத ராசிபலன்கள்
- கன்னி - மாத ராசிபலன்கள்
- துலாம் - மாத ராசிபலன்கள்
- விருச்சிகம் - மாத ராசிபலன்கள்
- தனுசு - மாத ராசிபலன்கள்
- மகரம் - மாத ராசிபலன்கள்
- கும்பம் - மாத ராசிபலன்கள்
- மீனம் - மாத ராசிபலன்கள்

