கடகம் 2019 புத்தாண்டு ராசிபலன்:
கடகம் புத்தாண்டு ராசிபலன்கள் 2019:
பொதுவானவை:
வருடத்தின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் நல்ல நிலையில் உள்ளதால் நன்மைகள் கிடைக்கும். அரசாங்க ஆதரவு உங்களுக்கு உண்டு. செவ்வாய் ஒன்பதாம் வீட்டில் உள்ளதால் வருடத்தின் தொடக்கத்தில் உடன் பிறப்புகளால் நன்மைகள் ஏற்படும். தடைபட்ட பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். ஐந்தாம் வீட்டில் உள்ள சுக்கிரன் காரணமாக கணவன் மனைவி அன்பு, குடும்ப ஒற்றுமை போன்றவை சிறப்பாக இருக்கும். வருட ஆரம்பத்தில் கிரகங்கள் சிறப்பாக உள்ளதால் அதிக நன்மைகள் கிடைக்கும். ராசியில் உள்ள ராகு காரணமாக எதிர்பார்த்த தனவரவு கிடைக்கும். வெளிநாடு சென்று வர வாய்ப்புகள் சிறக்கும். ஏழாம் வீட்டில் உள்ள கேது காரணமாக அவ்வ போது சில பிரச்சனைகள் வரலாம். ஐந்தாம் வீட்டில் உள்ள குரு பகவான் காரணமாக மனமகிழ்ச்சி ஏற்படும். காதல், திருமணம், குழந்தைபிறப்பு போன்ற விஷயங்கள் சிறப்படையும். நான்கில் சந்திரன் சுக்கிரனோடு உள்ளதால் தாயாரின் உடல்நலனை கவனிக்கவும். ஆறாம் வீட்டில் பல கிரகங்கள் சேர்ந்து உள்ளதால் வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு இனி நல்ல வேலை கிடைக்கும், சிலருக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.
ஆறாம் வீட்டில் உள்ள சனி பகவான் காரணமாக எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். வேலைக்காரர்களால் நன்மைகள் உண்டு. வருட இறுதியில் குரு பகவான் பெயர்ச்சி ஆவதால் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். மேலும் இந்த வருடம் நிகழும் குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி போன்றவை உங்களுக்கு என்ன பலன்களை தரும் என்பதை விரிவாக பார்போம்
2019 கடக ராசி புத்தாண்டு பலன்கள் வீடியோ:
குரு பெயர்ச்சி:
ஐந்தாம் வீட்டில் உள்ள குருபகவான் காரணமாக குழந்தை பாக்கியம், திருமணம் போன்ற சுப நிகழ்சிகள் இனிதாக நடைபெறும். வெளியில் நல்ல பெயர் மரியாதை கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி பிறக்கும். கமிசன் துறையில் உள்ளவர்கள் அதிக நன்மைகள் பெறுவார்கள். உங்களின் உடல் ஆரோக்கியம் சீராகும். நீங்கள் யோசித்து எடுக்கும் முடிவுகளால் உங்களுக்கு நன்மை பிறக்கும். வழக்குகளில் உங்களுக்கு விட்டுகொடுத்து செல்வதால் நன்மைகள் பிறக்கும். மேலும் குருபகவான் 29-03-2019 அன்று விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு அதாவது ஆறாம் வீட்டிற்கு சஞ்சாரம் செய்கிறார், மீண்டும் குருபகவான் வக்கிர நிலையில் 23-04-2019 அன்று விருச்சக ராசிக்கே (ஐந்தாம்) செல்கிறார். பின் 05-11-2019 அன்று முறையாக தனுசு ராசிக்கு செல்கிறார். வருட இறுதியில் ஆறாம் வீட்டிற்கு செல்லும் குரு பகவான் காரணமாக வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு இனி நல்ல வேலை கிடைக்கும், சிலருக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.
சனிப் பெயர்ச்சி:
2019 இல் சனிபெயர்ச்சி இல்லை. ஆறாம் வீட்டில் ரண குண சனியாக வரும் 2 ½ வருடங்கள் சனிபகவான் தனுசு ராசியில் உள்ளதால் எதிர்பார்த்த நன்மைகள் யாவும் கிடைக்கும். வேலை இல்லாதவர்கள் மிகவும் சிறப்பான வேலையை பெறும் காலம். வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வழக்குகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். அரசியல்வாதிகள் நன்மையை அடையும் காலம். சகோதர சகோதரிகள் வழியில் நன்மைகள் உண்டாகும். எதிர்பார்த்த தனவரவு கிடைக்கும்.
ராகு கேது பெயர்ச்சி:
ராகுபகவான் ராசியில் வீட்டில் உள்ளதால் நன்மைகள் கிடைக்கும். வெளிநாடு, வெளிநாடு வேலை போன்றவை சிறப்பாக இருக்கும். அந்நிய நபர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும். ஏழாம் வீட்டில் உள்ள கேது பகவான் காரணமாக சொந்த தொழில் விஷயங்கள் சிறப்பாக இருக்கும். மேலும் 07-03-2019 அன்று ராகு பகவான் மிதுன ராசிக்கும், கேதுபகவான் தனுசு ராசிக்கும் சஞ்சாரம் செய்கிறார்கள். அதாவது ராகு பன்னிரெண்டாம் வீட்டிலும், கேது ஆறாம் வீட்டிற்கும் பெயர்ச்சி அடைவார்கள். இதன் மூலம் நன்மைகள் சற்று குறையும். வரவிற்கும் செலவிற்கும் சமமாக இருக்கும். சிலருக்கு வேலைநாடு வேலை கிடைக்கும்.
பொதுவாக இந்த 2019 ம்வருடம் ஓரளவு நன்மையான வருடமாக இருக்கும். வருடத்தின் பிற்பாதியில் நன்மைகள் பெருகும்.
அதிர்ஷ்ட எண் : 3, 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட நாள் : வியாழன், வெள்ளிகிழமை
அதிர்ஷ்ட இரத்னம் : மஞ்சள், புஷ்பராகம், வைரம்
பரிகாரம் :
“செவ்வாய்க்கிழமை” தோறும் “முருகனை” வழிபடுதல் நன்மையேற்படும். அத்துடன் குலதெய்வம் வழிபாடும் நன்மைதரும். ஜீவசமாதி அடைந்த மகான்களை வழிபடுதல் நல்லது.
கீழே உள்ள ராசிகளை கிளிக் செய்து உங்களுக்கு உண்டான பலன்களை பரிகார விளக்கங்களுடன் தெரிந்து கொண்டு பயன்பெறவும்...
- மேஷம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- ரிஷபம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- மிதுனம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- கடகம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- சிம்மம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- கன்னி 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- துலாம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- விருச்சிகம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- தனுசு 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- மகரம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- கும்பம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- மீனம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- மாத ராசிபலன்கள் முதல் பக்கம்
- மேஷம் - மாத ராசிபலன்கள்
- ரிஷபம் - மாத ராசிபலன்கள்
- மிதுனம் - மாத ராசிபலன்கள்
- கடகம் - மாத ராசிபலன்கள்
- சிம்மம் - மாத ராசிபலன்கள்
- கன்னி - மாத ராசிபலன்கள்
- துலாம் - மாத ராசிபலன்கள்
- விருச்சிகம் - மாத ராசிபலன்கள்
- தனுசு - மாத ராசிபலன்கள்
- மகரம் - மாத ராசிபலன்கள்
- கும்பம் - மாத ராசிபலன்கள்
- மீனம் - மாத ராசிபலன்கள்

