தனுசு 2019 புத்தாண்டு ராசிபலன்:
தனுசு புத்தாண்டு ராசிபலன்கள் 2019:
பொதுவானவை:
வருட தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு பகவான் பன்னிரெண்டாம் வீட்டில் மறைந்து உள்ளதால் அனைத்து நன்மைகளும் குறையும். பன்னிரெண்டாம் ஜென்மத்தில் உள்ள சனி பகவான் காரணமாக விரயங்களும் செலவுகளும் அதிகரிக்கும். இரண்டாம் வீட்டில் உள்ள கேது காரணமாக ஓரளவு நன்மைகளை எதிர் பார்க்கலாம். எட்டாம் வீட்டில் உள்ள ராகு காரணமாக தொழில் மந்த நிலையில் இருக்கும். புதிய நபர்கள், அந்நிய நபர்களை நம்ப கூடாது. வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் தடைபடும்.
மேலும் ராசியில் உள்ள சூரியன், புதன், சனி சேர்க்கை உங்களுக்கு பல தடைகளை ஏற்படுத்தும். நிதானமாக செயல்பட்டால் மட்டும் தான் முன்னேற முடியும். திருமணம், குலந்தை பிறப்பு போன்ற சுப காரியங்கள் தடைபடும். சென்ற ஆண்டை விட இந்த 2019 ம் வருடம் கடினமானதாக இருக்கும். கவனமாக செயல்பட வேண்டியது அவசியம். வருட இறுதியில் நிகழும் குரு பெயர்ச்சி உங்களுக்கு ஓரளவு நன்மைகளை தரும். மேலும் இந்த வருடம் நிகழும் குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி போன்றவை உங்களுக்கு என்ன பலன்களை தரும் என்பதை விரிவாக பார்போம்
2019 தனுசு ராசி புத்தாண்டு பலன்கள் வீடியோ:
குரு பெயர்ச்சி:
பன்னிரெண்டாம் வீட்டில் உள்ள ராசிநாதன் குருபகவான் காரணமாக நன்மைகள் குறையும். வலி வேதனை அவமானம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மந்த நிலையில் செல்லும். வேலையில் உள்ளவர்கள் மூத்த அதிகாரிகளுடன் சண்டைபோக்கை விடுத்து பொறுமையுடன் செயல்படவும். வேலை இல்லாமல் இருந்தவர்கள் எதேனும் சுமாரான வேலையில் சேர்வார்கள். மேலும் குருபகவான் 29-03-2019 அன்று விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு அதாவது ராசிக்குள் (ஜென்மத்தில்) சஞ்சாரம் செய்கிறார், மீண்டும் குருபகவான் வக்கிர நிலையில் 23-04-2019 அன்று விருச்சக ராசிக்கே செல்கிறார். பின் 05-11-2019 அன்று முறையாக தனுசு ராசிக்கு செல்கிறார். வருட இறுதியில் நடைபெறும் குரு பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பான நன்மைகளை தேடி தரும், அதுவரை காத்திருப்பது நல்லது.
சனிப் பெயர்ச்சி:
2019 இல் சனிபெயர்ச்சி இல்லை. உங்கள் ராசியில் சனிபகவான் ஜென்ம சனியாக வருவதால் எதிலும் கவனமாக செயல்பட வேண்டும். எந்த செயலை எடுத்தாலும் அதில் தடைகள் ஏற்படும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடுதல் கூடாது.யாருக்கும் கடன்களோ அல்லது ஜாமின் கையெழுத்தோ இடுதல் கூடாது. உழைப்பிற்கேற்ப தனவரவு கிடைத்தாலும், அதை விட அதிகமான செலவுகள் ஏற்படும். உறவினர்களால் தேவை இல்லாத பிரச்சனைகள் ஏற்படும். சனி பகவான் பாதிப்பில் இருந்து விடுபட இறைவழிபாடு செய்வதே சிறந்த தீர்வு.
ராகு கேது பெயர்ச்சி:
ராகுபகவான் எட்டாம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் குறைந்து பிரச்சனைகள் ஏற்படும். வெளிநாடு, வெளிநாடு வேலை போன்றவை பாதிக்கும். அந்நிய நபர்கள் மூலம் பிரச்சனைகள் / தொல்லைகள் கிடைக்கும். இரண்டாம் வீட்டில் உள்ள கேது பகவான் காரணமாக தொழில் விஷயங்கள் ஓரளவு சிறப்பாக இருக்கும். மேலும் 07-03-2019 அன்று ராகு பகவான் மிதுன ராசிக்கும், கேதுபகவான் தனுசு ராசிக்கும் சஞ்சாரம் செய்கிறார்கள். அதாவது ராகு ஏழாம் வீட்டிலும், கேது ராசிக்கும் பெயர்ச்சி அடைவார்கள். இதன் மூலம் நன்மைகள் உங்களுக்கு தொடரும். இந்த பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பான பலன்களை தரும்
பொதுவாக இந்த வருடம் ஆரம்பம் குறைவான நன்மைகளை தரும் வருடமாக இருக்கும். பாதிக்கு மேல் மற்றும் குரு பெயற்சிக்கு பிறகே நிலமை சிறப்ப்டையும், அதுவரை காத்திருப்பது சிறப்பானது.
அதிர்ஷ்ட எண் : 8, 6
அதிர்ஷ்ட நிறம் : கருமை, வெண்மை
அதிர்ஷ்ட நாள் : சனி, வெள்ளி
அதிர்ஷ்ட ரத்தினம் : நீலக்கல், வைரம்
பரிகாரம்
சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு எள்தீபம் ஏற்றி வழிபடவும்.. “சிவன் கோயிலுக்குச்” சென்று சிவனை வழிபடுவதும் சிறப்பானதாகும். திருநள்ளாறு சென்று நீராடி சனிபகவானை தரிசிப்பது நல்லது. ஆரணி எரிக்குப்பம் எந்திரசனீஸ்வர பகவான் வழிபாடும் பல நன்மைகளை தரும்.
கீழே உள்ள ராசிகளை கிளிக் செய்து உங்களுக்கு உண்டான பலன்களை பரிகார விளக்கங்களுடன் தெரிந்து கொண்டு பயன்பெறவும்...
- மேஷம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- ரிஷபம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- மிதுனம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- கடகம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- சிம்மம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- கன்னி 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- துலாம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- விருச்சிகம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- தனுசு 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- மகரம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- கும்பம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- மீனம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- மாத ராசிபலன்கள் முதல் பக்கம்
- மேஷம் - மாத ராசிபலன்கள்
- ரிஷபம் - மாத ராசிபலன்கள்
- மிதுனம் - மாத ராசிபலன்கள்
- கடகம் - மாத ராசிபலன்கள்
- சிம்மம் - மாத ராசிபலன்கள்
- கன்னி - மாத ராசிபலன்கள்
- துலாம் - மாத ராசிபலன்கள்
- விருச்சிகம் - மாத ராசிபலன்கள்
- தனுசு - மாத ராசிபலன்கள்
- மகரம் - மாத ராசிபலன்கள்
- கும்பம் - மாத ராசிபலன்கள்
- மீனம் - மாத ராசிபலன்கள்

