கும்பம் 2019 புத்தாண்டு ராசிபலன்:
கும்பம் புத்தாண்டு ராசிபலன்கள் 2019:
பொதுவானவை:
உங்கள் ராசிநாதன் சனி பதினோராம் வீட்டில் உள்ளதால் பொதுவாக நன்மைகள் கிடைக்கும். உங்களின் தொழில் சிறப்பான நிலையில் இருக்கும். எதிர்பார்த்த தனவரவு கிடைக்கும். வேலையில் உள்ளவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற நன்மைகளை பெறுவார்கள். பத்தாம் வீட்டில் உள்ள குரு பகவான் மற்றும் சுக்கிரன் காரணமாக நன்மைகள் கிடைக்கும். உங்களின் தொழில் சிறப்படையும். வேலை இல்லாமல் கஷ்டபட்டவர்களுக்கு இனி சிறப்பான வேலை கிடைக்கும். பன்னிரெண்டாம் உள்ள கேது காரணமாக அவ்வ போது குழப்பங்கள் ஏற்படும். ஆறாம் வீட்டில் உள்ள ராகு காரணமாக அந்நிய நபர்களால் நன்மைகள் ஏற்படும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் ஏற்படும்.
இரண்டாம் வீட்டில் உள்ள செவ்வாய் காரணமாக எதிர்பார்த்த தனவரவு கிடைக்கும். இடம், மனை வாங்கும் யோகம் உங்களுக்கு உண்டு. சகோதர சகோதரி வழியில் நன்மைகள் ஏற்படும். சுக்கிரன், புதன் போன்ற கிரகங்கள் சாதகமாக உள்ளதால் குடும்பத்தில் நிம்மதி மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி அன்பு ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பத்தாம் வீட்டில் உள்ள குரு பகவான் காரணமாக எதிர்பார்த்த நன்மைகள் யாவும் கிடைக்கும். உங்கள் மதிப்பு, கௌரவம் போன்றவை சமுதாயத்தில் சிறப்படையும். மேலும் இந்த வருடம் நிகழும் குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி போன்றவை உங்களுக்கு என்ன பலன்களை தரும் என்பதை விரிவாக பார்போம்
2019 கும்ப ராசி புத்தாண்டு பலன்கள் வீடியோ:
குரு பெயர்ச்சி:
பத்தாம் வீட்டில் உள்ள குருபகவான் காரணமாக நன்மைகள் ஏற்படும். தொழில் சிறப்படையும் நிலை உண்டாகும். பொறுப்பான பதவிகள் உங்களை தேடி வரும். வேலை இல்லாமல் இருந்தவர்கள் நல்ல வேலையில் சேர்வார்கள். பொருளாதார உயர்வு ஏற்படும். சமுதாயத்தில் கெளரவம் அந்தஸ்து உயரும் குருபகவான் 29-03-2019 அன்று விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு அதாவது பதினோராம் வீட்டிற்கு சஞ்சாரம் செய்கிறார், மீண்டும் குருபகவான் வக்கிர நிலையில் 23-04-2019 அன்று விருச்சக ராசிக்கே செல்கிறார். பின் 05-11-2019 அன்று முறையாக தனுசு ராசிக்கு செல்கிறார். பதினோராம் வீட்டில் வருட இறுதியில் வரும் குருபகவான் காரணமாக பொதுவாக திருப்தியான வாழ்க்கை சூழல் உண்டாகும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். பலருக்கும் தடைபட்ட திருமணம், குழந்தை பிறப்பு போன்ற அனைத்து நன்மைகளும் கிடைக்கும். கணவன் மனைவி அன்பு குடும்ப ஒற்றுமை போன்றவை சிறக்கும்.
சனிப்பெயர்ச்சி:
2019 இல் சனிபெயர்ச்சி இல்லை. உங்கள் ராசிநாதன் சனிபகவான் பதினோராம் வீடான லாப ஸ்தானத்தில் இருப்பதால் நன்மைகள் தொடரும். வெளி உலகில் உங்கள் புகழ், கெளரவம் போன்றவை சிறப்படையும். சேமிப்புகள் மூலம் திருப்தியான வாழ்க்கை சூழல் உண்டாகும். நண்பர்கள் மூலம் மனமகிழ்ச்சி கிடைக்கும். எதிர்பார்த்த தனவரவு கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்கள் அதிக லாபம் பெறுவார்கள். திருமண தடைகள் விலகி சிறப்பாக திருமணம் நடைபெறும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் அமையும். சிலருக்கு காதல் கனிந்து திருமணத்தில் சென்று முடியும்.
ராகு கேது பெயர்ச்சி:
ராகுபகவான் ஆறாம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் கிடைக்கும். வெளிநாடு, வெளிநாடு வேலை போன்றவை சிறப்பாக இருக்கும். அந்நிய நபர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும். பன்னிரெண்டாம் வீட்டில் உள்ள கேது பகவான் காரணமாக செலவுகளும், விரயங்களும் ஏற்படும். மேலும் 07-03-2019 அன்று ராகு பகவான் மிதுன ராசிக்கும், கேதுபகவான் தனுசு ராசிக்கும் சஞ்சாரம் செய்கிறார்கள். அதாவது ராகு ஐந்தாம் வீட்டிலும், கேது பதினோராம் வீட்டிற்கும் பெயர்ச்சி அடைவார்கள். இதன் மூலம் நன்மைகள் உங்களுக்கு தொடரும். நினைத்த காரியங்கள் யாவும் நடக்கும் சிறப்பான காலம்.
பொதுவாக இந்த 2019 ம் வருடம் மிகவும் சிறப்பான வருடமாக அமையும் அமையும். நெங்கள் விரும்பிய விஷயங்கள் உங்களுக்கு கிடைக்கும் பொற்காலமாக இருக்கும்.
அதிர்ஷ்ட எண் : 2, 3
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை, மஞ்சள்
அதிர்ஷ்ட நாள் : திங்கள், வியாழன்
அதிர்ஷ்ட ரத்தினம் : முத்து, மஞ்சள் புஷ்பராகம்
பரிகாரம்
புதன் கிழமை தோறும் பெருமாளை வழிபடுதல் வேண்டும். வெள்ளிக்கிழமை “மஹாலெஷ்மியை” வணங்குதல் நற்பலன் ஆகும்.
கீழே உள்ள ராசிகளை கிளிக் செய்து உங்களுக்கு உண்டான பலன்களை பரிகார விளக்கங்களுடன் தெரிந்து கொண்டு பயன்பெறவும்...
- மேஷம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- ரிஷபம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- மிதுனம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- கடகம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- சிம்மம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- கன்னி 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- துலாம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- விருச்சிகம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- தனுசு 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- மகரம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- கும்பம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- மீனம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- மாத ராசிபலன்கள் முதல் பக்கம்
- மேஷம் - மாத ராசிபலன்கள்
- ரிஷபம் - மாத ராசிபலன்கள்
- மிதுனம் - மாத ராசிபலன்கள்
- கடகம் - மாத ராசிபலன்கள்
- சிம்மம் - மாத ராசிபலன்கள்
- கன்னி - மாத ராசிபலன்கள்
- துலாம் - மாத ராசிபலன்கள்
- விருச்சிகம் - மாத ராசிபலன்கள்
- தனுசு - மாத ராசிபலன்கள்
- மகரம் - மாத ராசிபலன்கள்
- கும்பம் - மாத ராசிபலன்கள்
- மீனம் - மாத ராசிபலன்கள்

