மீனம் 2019 புத்தாண்டு ராசிபலன்:
மீனம் புத்தாண்டு ராசிபலன்கள் 2019:
பொதுவானவை:
உங்கள் ராசிநாதன் குரு பகவான் 9ம் வீட்டில் உள்ளதால் எடுத்த காரியங்களில் நன்மைகள் கிடைக்கும். குழந்தை பிறப்பு, திருமணம் சுப காரியங்கள் இனிதாக நடைபெறும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். வருட தொடக்கத்தில் செவ்வாய் உங்கள் ராசியில் பரிவர்தனை யோகம் பெற்று உள்ளதால் பல நன்மைகள் கிடைக்கும். பதினோராம் வீட்டில் உள்ள கேது பகவான் காரணமாக திருப்தியான வாழ்க்கை அமையும். ஐந்தாம் வீட்டில் உள்ள ராகு காரணமாக அந்நிய நபர்களால் நன்மைகள் / மகிழ்ச்சி விளையும். செவ்வாய் ஜென்மத்தில் உள்ளதால் தைரியமான முடிவுகளால் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். பத்தாம் வீட்டை பல கிரகங்கள் தொடர்பு கொள்வதால் உங்களுக்கு நல்ல பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும். வருட இறுதியில் குரு பகவான் பத்தாம் வீட்டில் செல்லும் காலம் நன்மைகள் குவியும்.
இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் குரு பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பை தரும். பத்தாம் வீட்டில் உள்ள சனி காரணமாக நன்மைகளை பெறுவிர்கள். தொழில் சிறப்பான நிலையை அடையும். வேலையில் உள்ளவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற நன்மைகளை பெறுவார்கள். பெண்கள் மனமகிழ்ச்சியுடன் காணபடுவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மேலும் இந்த வருடம் நிகழும் குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி போன்றவை உங்களுக்கு என்ன பலன்களை தரும் என்பதை விரிவாக பார்போம்
2019 மீனம் ராசி புத்தாண்டு பலன்கள் வீடியோ:
குரு பெயர்ச்சி:
ஒன்பதாம் வீட்டில் உள்ள குருபகவான் காரணமாக பொதுவாக நன்மைகள் கிடைக்கும். திருமணம், குழந்தை பிறப்பு போன்ற சுபகாரியங்கள் ஏற்படும். திருமண தடைகள் விலகி சுப காரியங்கள் நடக்கும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் மேலும் குருபகவான் 29-03-2019 அன்று விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு அதாவது பத்தாம் வீட்டிற்கு சஞ்சாரம் செய்கிறார், மீண்டும் குருபகவான் வக்கிர நிலையில் 23-04-2019 அன்று விருச்சக ராசிக்கே செல்கிறார். பின் 05-11-2019 அன்று முறையாக தனுசு ராசிக்கு செல்கிறார். வருட இறுதியில் பத்தாம் வீட்டில் வரும் குருவால் பொதுவாக வேலையில் உள்ளவர்கள் நன்மை பெறுவார்கள். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை அமையும். புகழ், கெளரவம் போன்றவை சிறப்படையும். சொந்த தொழில் நல்ல நிலையில் இருக்கும். சொந்த தொழிலில் வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் போன்ற நன்மைகளை எதிர்பார்க்கலாம்
சனிப்பெயர்ச்சி:
2019 இல் சனிபெயர்ச்சி இல்லை. உங்கள் ராசிக்கு சனிபகவான் பத்தாம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் கிடைக்கும். வேலையில் உள்ளவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற பல நன்மைகளை பெறுவார்கள். சொந்த தொழில் லாப கரமாக அமையும். நினைத்த இடத்தில் இருந்து தனவரவும் பொருள் வரவும் கிடைக்கும். வீடு, மனை, வாகனம் போன்றவை வாங்கும் நிலை உண்டாகும். சகோதர சகோதரிகள் வழியில் நன்மைகள் உண்டாகும். அரசு பணியில் உள்ளவர்கள் பொதுவாக நன்மைகளை பெறுவார்கள்.
ராகு கேது பெயர்ச்சி:
ராகுபகவான் ஐந்தாம் வீட்டில் உள்ளதால் மனமகிழ்ச்சி கிடைக்கும். வெளிநாடு, வெளிநாடு வேலை போன்றவை சிறப்பாக இருக்கும். அந்நிய நபர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும். பதினோராம் வீட்டில் உள்ள கேது பகவான் காரணமாக நன்மைகள் இருக்கும். மேலும் 07-03-2019 அன்று ராகு பகவான் மிதுன ராசிக்கும், கேதுபகவான் தனுசு ராசிக்கும் சஞ்சாரம் செய்கிறார்கள். அதாவது ராகு நான்காம் வீட்டிலும், கேது பத்தாம் வீட்டிற்கும் பெயர்ச்சி அடைவார்கள். இதன் மூலம் நன்மைகள் உங்களுக்கு தொடரும். புதிய தொழில் தொடங்க சிறப்பான காலமாக அமையும். வீடு, வாகனம் அமையும் யோகம் பலருக்கு உண்டு.
பொதுவாக இந்த வருடம் நல்ல வருடமாக அமையும். இருக்கும் ராசிகளிலேயே அதிக நன்மைகள் பெற போகும் அற்புதமான ராசி உங்கள் ராசி தான்... முயற்சி செய்தால் அதிக பயன் பெறலாம்.
அதிர்ஷ்ட எண் : 1, 3
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை, மஞ்சள்
அதிர்ஷ்ட நாள் : ஞாயிறு, வியாழன்
அதிர்ஷ்ட ரத்தினம் : மாணிக்கம், புஷ்பராகம்
பரிகாரம்
“திங்கள்கிழமை” தோறும் “சிவன் கோயில்” சென்று “அம்பாளை” தரிசனம் செய்தல் நலம். மேலும் செவ்வாய்க்கிழமை “முருகனை” வணங்கிவர நற்பலன்கள் ஏற்படும்.
கீழே உள்ள ராசிகளை கிளிக் செய்து உங்களுக்கு உண்டான பலன்களை பரிகார விளக்கங்களுடன் தெரிந்து கொண்டு பயன்பெறவும்...
- மேஷம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- ரிஷபம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- மிதுனம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- கடகம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- சிம்மம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- கன்னி 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- துலாம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- விருச்சிகம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- தனுசு 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- மகரம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- கும்பம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- மீனம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க
- மாத ராசிபலன்கள் முதல் பக்கம்
- மேஷம் - மாத ராசிபலன்கள்
- ரிஷபம் - மாத ராசிபலன்கள்
- மிதுனம் - மாத ராசிபலன்கள்
- கடகம் - மாத ராசிபலன்கள்
- சிம்மம் - மாத ராசிபலன்கள்
- கன்னி - மாத ராசிபலன்கள்
- துலாம் - மாத ராசிபலன்கள்
- விருச்சிகம் - மாத ராசிபலன்கள்
- தனுசு - மாத ராசிபலன்கள்
- மகரம் - மாத ராசிபலன்கள்
- கும்பம் - மாத ராசிபலன்கள்
- மீனம் - மாத ராசிபலன்கள்

