• Welcome to free tamil astrology website - www.tamilhoroscope.in
  • No.1 Astrology Website in Tamil Language
  • ராசிபலன்கள் - திருமண பொருத்தம் பார்க்க...

2017-2020 சனிப்பெயர்ச்சி பலன்கள்:

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 :

கிரகங்களின் தலைமையான சூரியனின் மகன் தான் சனிபகவான். ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனி தான். கிரகங்களில் மிகவும் மந்த தன்மை கொண்ட கிரகம் சனி தான். பொதுவாக இந்த சனிபகவான் தரும் நன்மைகளும் தீமைகளும் அதிகம். இதனால் தான் சனியை போல கொடுப்பவரும் இல்லை, கெடுப்பவரும் இல்லை என்பார்கள். நவக்கிரகங்களில் மிகவும் அசுப கிரகமாக கருதப்படும் சனிபகவான் ஒரு ராசியை கடக்க 2 ½ ஆண்டுகள் எடுத்து கொள்கிறார். சனிபகவான் மட்டுமே அதிக காலம் ஒரு ராசியில் தங்கியிருப்பார். இவர் 12 ராசிகளையும் முழுமையாக சுற்றி வர சுமார் 30 ஆண்டுகள் எடுத்து கொள்வதால் இவரை “மந்தகாரகர்” என்று அழைப்பர். காரக தத்துவ அடிப்படையில் இவர் கடுமையான உழைப்பிற்கும், வலி, வேதனைகளுக்கும் காரகர் என்பதால் இவர் யாருடைய ராசியில் சஞ்சரிக்கிறாறோ அவருக்கு மந்தநிலை, உடல் உழைப்பு காரணமாக வலி போன்றவை ஏற்படும்.

திருக்கணிதப்படி சனிபகவான் துன்முகி வருடம் தை மாதம் 13ம் தேதி அதாவது 26-01-2017 அன்று இரவு 7:29 மணியளவில் விருச்சக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார். சிம்ம லக்னம், தனசு ராசி பூரட நட்சத்திரம் 4-ம் பாதத்தில் சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து பெயர்ச்சியாகிறார்.

ராசிக்கு முன்/பின் சனிபகவான் சஞ்சாரம் செய்வதை ஏழரை சனி என்பர். ராசிக்கு முன் உள்ள சனியை விரைய சனி என்றும் ராசியில் உள்ள சனியை ஜென்ம சனி என்றும், ராசிக்கு பின் உள்ள சனியை குடும்ப சனி என்றும் அழைப்பர்.

ராசிக்கு 4 -> அர்த்தாஷ்டம சனி
ராசிக்கு 7 -> கண்டகச் சனி
ராசிக்கு 8 -> அஷ்டம சனி

யாருக்கெல்லாம் சனியின் தசா – புத்தி – அந்தரம் நடைபெறுகிறதோ அவர்களுக்கு வாழ்வில் மாற்றங்கள் ஏற்படும். இந்த பெயர்ச்சியின் மூலம் எந்த எந்த ராசிக்கு என்ன பலன்கள் என்பதை தெரிந்து கொள்வோம். ஜாதகத்தில் சனி சிறப்பாக இருப்பவர்கள் தீமைகளை பெற மாட்டார்கள்.

கீழே உள்ள ராசிகளை கிளிக் செய்து உங்களுக்கு உண்டான பலன்களை பரிகார விளக்கங்களுடன் தெரிந்து கொண்டு பயன்பெறவும்...


2017 Saturn Transit Predictions:
Details about Sani Peyarchi 2017-2020:

The sun is the head of planets. Saturn is the son of the sun. Saturn is the only planet who has got the name “Easwaran” (Lord Shiva). Saturn is the slowest planet. In general the Saturn gives more benefits and problems. That is why we used to say “there is no one who gives benefits and problems like Saturn”. The Saturn is considered as a bad planet. The Saturn takes 2 ½ to transit from one zodiac sign to another. The Saturn is the only planet which stays in one zodiac sign for long duration. As the Saturn takes 30 years to complete one cycle of transition for all the 12 zodiac signs, it is called as slow planet.

As per characteristics of planets, the Saturn is responsible for slavery job, pain, trouble. If the Saturn is in one person’s zodiac then his characteristics will be recession, slow and he will get body pain due hard work in job. All his works will get complete slowly. (or delayed) According to trik panchang, the Saturn transit from scorpion to Sagittarius on the 13th of the year “durmugi” (i.e) 26-1-2017 at 7:29 pm.

The Saturn transits from scorpion in Leo lagna, Sagittarius zodiac, poorada natshatra (star), 4th phase.

If the Saturn visits transiting front and back of a zodiac then it is termed as 7 ½ Saturn. The Saturn that is in front of a zodiac is called as “Viraya Saturn” (Expense Saturn) The Saturn that is in the zodiac is called as “Jenma Saturn” and the Saturn that is in back of the zodiac is called “Kudumba Saturn “ (Family Saturn)

4th place from zodiac ------> Arthaashtama saturn
7th place from zodiac -------> Kandaga saturn
8th place from zodiac ------ -> Ashtama saturn

For those who have the saturn Dasa, bhukthi and andharam, they will see changes in their life. Let us briefly have a look at benefits of each zodiac. The benefits and problems of the Saturn transition for all the zodiac signs are given briefly given in this website. Click your zodiac sign to get your 2017-2020 Saturn transit results.

ஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ரஜ்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு. பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்
Best Astrology Website for Marriage Matching & Rasipalan in Tamil